ரஃபேல் போர் விமானம் ஒப்பந்தம் தொடர்பாக , மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் நாடாளுமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து 36 விமானங்களை வாங்க மத்திய அரசு செய்துள்ள ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தை இந்த ஒப்பந்தத்தில் சேர்த்தது தவறு என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
இந்நிலையில், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான தணிக்கை அறிக்கையை மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ரஃபேல் விமானத்தின் விலை குறித்த தகவல்கள், ரகசியம் கருதி இந்த அறிக்கையில் இடம்பெறாது என்று கூறப்படுகிறது.