மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் திட்டம் இல்லை – மத்திய அரசு

இரு மொழிகளை தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் திட்டம் இல்லை என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

இந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் வகையில் சட்டத்திருத்தம் செய்யும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா என மாநிலங்களவை உறுப்பினர் எழுத்துபூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய், இந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் திட்டம் ஏதுமில்லை என தெரிவித்துள்ளார்.

1968 ஆம் ஆண்டு மாநிலங்களுடன் கலந்தாலோசித்து எடுத்த முடிவின்படி மாநிலங்களில் மூன்று மொழிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார். இதன்படி, இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மத்திய அரசின் பெயர் பலகைகளில் மாநில மொழி, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகியவை பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version