அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் 19 வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில், 2 ஆம் நிலை வீரரும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரரான ரஃபேல் நடால், ரஷ்யாவை சேர்ந்தவரும் தரவரிசையின் 5 ஆம் நிலை வீரரான டேனில் மெட்விதேவ்வுடன் மோதினர். பரபரப்பான இப்போட்டியில் 7 க்கு 5, 6-க்கு 3, 5-க்கு 7, 4-க்கு 6, 6-க்கு 4 என்ற செட் கணக்கில் மெட்விதேவை வீழ்த்தி, ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன் மூலம் அமெரிக்க ஒபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை 4 ஆவது முறையாக கைப்பற்றிய நடால், ஒட்டுமொத்த அளவில் 19 வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தனதாக்கினார். இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற நடாலுக்கு கோப்பையுடன் 27 கோடியே 58 லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.