ரபேல் போர் விமானங்கள் ஜூலை இறுதிக்குள் இந்தியா வந்தடைய உள்ளது!

ஜூலை மாத இறுதிக்குள் ஆறு அதி நவீன ரபேல் போர் விமானங்கள் இந்தியா வர உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

லடாக் பகுதியில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து, இந்தியா தனது ராணுவ பலத்தை வலுப்படுத்தி வருகிறது. புதிய பாதுகாப்பு தளவாடங்களை வாங்குவதற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை பைலட்டுகளுக்கான சிறப்பு பயிற்சி, பிரான்சில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொலை தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணைகளுடன் கூடிய ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்க உள்ளது. 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை அழிக்கும் சக்தி கொண்ட இந்த விமானங்கள் வரும் ஜுலை இறுதிக்குள் இந்தியா வந்தடையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் சீன விமானப்படையின் பலத்தைவிட இந்திய விமானப்படையின் பலம் அதிகரிக்கும். கடந்த 2016ம் ஆண்டு 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு, பிரான்ஸ் அரசுடன் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version