ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் விவகாரம் -25% தொகையை மத்திய அரசு செலுத்தி விட்டதாக தகவல்

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ரபேல் போர் விமானங்களுக்கான மொத்த கொள்முதல் தொகையில் 25 சதவீதத்தை மத்திய அரசு செலுத்தி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது மேற்கொண்ட ரபேல் ஒப்பந்தத்திற்கும் தற்போதைய ஒப்பந்தத்திற்கும் மிகபெரிய அளவில் வேறுபாடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. குறிப்பாக அனில் அம்பானியின் நிறுவனம் பயனடையும் வகையில் புதிய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதனிடையே ரபேல் போர் விமானங்கள் கொள்முதலில் விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டிருப்பதாக கூறி எதிர்க்கட்சிகளின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தநிலையில் ரபேல் போர் விமானங்களுக்கான மொத்த கொள்முதல் தொகையில் 25 சதவீதத்தை மத்திய அரசு செலுத்தி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version