முதலமைச்சரை சந்தித்து அதிமுகவில் இணைந்தார் ராதாரவி

திமுக பேச்சாளரும் நடிகருமான ராதாரவி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த ராதாரவி, தன்னை அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார். இந்த நிகழ்வின் போது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உடனிருந்தார். மக்களவை தேர்தலுக்கு முன்பு திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட ராதாரவி, தன் மீது நடவடிக்கை எடுத்த ஸ்டாலினின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில் ராதாரவி அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

Exit mobile version