உடனே தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் – சுகாதாரத்துறை செயலாளர்!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படும் பட்சத்தில், அது தீவிரமாக இருக்காது என்பதால், தகுதி உடையவர்கள் உடனே தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டு கொண்டுள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணி விக்டோரியா மாணவர் விடுதியில் தயாராகி வரும் கொரோனா கோவிட் கேர் மையத்தை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், லேசான மற்றும் அறிகுறி இல்லாதவர்களுக்கு விக்டோரியா கோவிட் கேர் மையத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்தார். முகக்கவசம் அணிவதன் மூலமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதை யாரும் மறுக்க இயலாது என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கொரோனா நுண்கிருமி எவ்வாறு பரவுகிறது என்பதை அறிந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு அரசு தள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படும் பட்சத்தில், அது தீவிரமாக இருக்காது என்று கூறினார். தகுதி உடையவர்கள் உடனே தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

 

Exit mobile version