புயல் பாதிப்புகள் குறித்த அறிக்கை கிடைத்த பிறகு மத்திய அரசு நிதி வழங்கும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் நிவாரணப் பணிகளினால் அதிக சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவித்தார். மத்திய அரசின் கடலோர காவல் படை மூலம் 70 கப்பல்களில் மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை வழங்கப்பட்டது என்றும், அதனால் மீனவர்கள் பாதுகாக்கப்பட்டனர் என்று கூறினார்.
மேலும், புயலால், ஆயிரக்கணக்கான மின் மாற்றிகளும், மின் கம்பங்களும் முறிந்து விழுந்து பலத்த சேதம் அடைந்துள்ளதாக தெரிவித்த அவர், புயல் பாதிப்புகள் குறித்து தமிழக அரசு அளிக்கும் அறிக்கையை பொறுத்து மத்திய அரசு நிதியுதவி வழங்குவது குறித்து உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று கூறினார்.