ஆர்.எஸ். பாரதி வழக்கு: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

கூட்டுறவு கட்டிட சங்க நிதியில் 7 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக, தி.மு.க எம்.பி ஆர்.எஸ் பாரதிக்கு எதிரான புகார் மீதான விசாரணையை, 4 வாரங்களில் முடிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1996 முதல் 2001ஆம் ஆண்டு வரை நங்கநல்லூர் கூட்டுறவு கட்டட சங்கத் தலைவராக இருந்த தற்போதைய தி. மு.க நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் அமைப்பு செயலாளருமான ஆர்.எஸ் பாரதி, கூட்டுறவு சங்கம் மூலம், வணிக வளாகம் கட்டியதில், சுமார் 7 லட்சம் முறைகேடு செய்ததாகக் கூறி, நடவடிக்கை எடுக்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி, ஆர்.எஸ் பாரதி உள்ளிட்ட முன்னாள் நிர்வாகிகளுக்கு, கடந்த 2004 ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு சங்க துணை பதிவாளர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அண்மையில், இந்த வழக்கு விசாரணையை 8 வாரங்களில் முடித்து, அக்டோபர் 12ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் கூடுதல் அவகாசம் வேண்டுமென கோரப்பட்டது. நான்கு வாரத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு சங்க துணை பதிவாளர் நேரில் ஆஜராக வேண்டுமெனவும் எச்சரித்து, வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்

Exit mobile version