தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஆதி திராவிடர் சமூகம், பத்திரிகையாளர்கள் மற்றும் உச்ச நீதிமன்றம் என சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் அருவருப்பான வார்த்தைகளால் மோசமாக விமர்சனம் செய்துள்ளார். இது பொதுமக்கள் மற்றும் அரசியல் மட்டத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திமுக அமைப்புச் செயலாளராக இருப்பவர் ஆர்.எஸ்.பாரதி. தி.மு.க-வின் அமைப்புச் செயலாளராக இருந்தாலும், தி.மு.க-வின் நீதித்துறை சம்பந்தமான விவகாரங்களை முழுமையாக கவனித்துக் கொள்வதுதான் ஆர்.எஸ்.பாரதியின் முதன்மையான வேலை. இந்த நிலையில், சென்னையில் அண்மையில் தி.மு.க அனுதாபிகள் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஆர்.எஸ்.பாரதி, தமிழகத்தில் வாழும் ஆதிதிராவிடர் உள்பட பல்வேறு சமூக மக்களை அவமதிக்கும் வகையிலும், உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக அவதூறு கிளப்பும் நோக்கத்திலும், பிரிவினையைத் தூண்டும் வகையிலும் பேசி சர்ச்சையை கிளப்பி உள்ளார். ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு தி.மு.க-விற்குள்ளேயே ஒரு தரப்பினரிடம் புகைச்சலையும் கிளப்பி உள்ளது.
தி.மு.க அனுதாபிகள் நடத்திய கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.
தமிழகத்தின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, நான் மட்டும் கட்சிப் பொறுப்பில் இல்லையென்றால், ஒரு தீவிரவாதியாக மாறியிருப்பேன் என்றார். வடமாநிலங்களில் உள்ளவர்களுக்கு அறிவே கிடையாது என்றும் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.
தி.மு.க-வுக்கு எந்தப் பிரச்னை என்றாலும், வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்றத்தை அணுகும் ஆர்.எஸ்.பாரதி, தன் பேச்சின் நடுவில் உச்ச நீதிமன்றத்தை பற்றியும் அவதூறான கருத்துக்களை தெரிவித்தார்.
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கோவில் கோவிலாக போய்க் கொண்டு இருக்கிறார் ஸ்டாலினின் மனைவி துர்கா… எந்தப் பிரச்னை என்றாலும், நீதிமன்றத்தை நாடி வழக்குத் தொடுப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். இந்த நிலையில், சிறுபான்மையினர் மற்றும் ஆதி திராவிடர்களின் நலன் விரும்பிகளாக காட்டிக் கொள்ளும் தி.மு.க-வினரின் செயல்பாடு ஒரு மாதிரியும், ஆர்.எஸ்.பாரதி போன்றவர்களின் பேச்சு, நடவடிக்கைகளும் வேறு மாதிரியாகவும் இருப்பது, பொதுமக்களையும், அரசியல் வட்டாரத்திலும் தி.மு.க மீதான வெறுப்பை மேலும் அதிகரித்துள்ளது.
Discussion about this post