காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை பணிகள் நடந்து வருகின்றன.இதனை தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் ஆய்வு செய்தார். பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2015 ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் அடிப்படையில் பணிகள் நடைபெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒரத்தூர் மற்றும் ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து மழை காலத்தில் தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூறினார். அடையாறு ஆற்றில் மழை வெள்ளம் ஏற்படும்போது, எந்தெந்த இடங்களில் தண்ணீரை தேக்கி தடுப்பணைகள் கட்டலாம் என்பது குறித்தும் ஆய்வு நடப்பதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால் தெரிவித்தார்.