சாதனை நிகழ்வாக தொடர்ந்து 19 மணி நேரம் பயணிக்கும் சோதனை விமானத்தை குவாண்டாஸ் நிறுவனம் இயக்கத் திட்டமிட்டுள்ளது.
குவாண்டாஸ் என்னும் ஆஸ்திரேலிய விமான நிறுவனம், உலகிலேயே அதிக தூரம் பயணிக்கும் விமான சேவையை தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, வரும் அக்டோபர் மாதம், நியூயார்க் மற்றும் லண்டனிலிருந்து, ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு, சோதனை ஓட்டமாக மூன்று விமானங்களை இயக்க உள்ளது. இதில் விமான ஓட்டிகள், விமானப் பணியாளர்களுடன், 40 பயணிகள் பயணிக்க உள்ளனர். மொத்தம் 19 மணி நேரம் பயணிக்கு இந்த விமானத்தின் மூலம் மனித உடல் நீண்ட நேரம் பயணிக்கும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் மற்றும் தன்மைகள் குறித்தும் கண்டறியத் திட்டமிடப்பட்டுள்ளதாக குவாண்டாஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.