தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தின் கீழ், நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கரும்பினை கொள்முதல் செய்யும் அரசு, அதற்கு உரிய விலையை கொடுத்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனவும், ஒரு துண்டு கரும்புக்கு பதிலாக, இந்தாண்டு ஒரு முழு கரும்பு வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்…
மயிலாடுதுறை மாவட்டத்தில் மன்னம்பந்தல், வானாதிராஜபுரம், திருமணஞ்சேரி, திருவாலங்காடு, அல்லிவிளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், விவசாயிகள் பொங்கல் கரும்பு விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். இம்முறை விவசாயிகளிடம் இருந்து அரசே நேரடியாக கொள்முதல் செய்வதால், இடைத்தரகு இல்லாமல் கரும்பு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….
வானாதிராஜபுரம் கிராமத்தில் மட்டும் விவசாயிகள் சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இக்கிராமத்தில் இருந்து மட்டும் மாவட்டத்துக்குத் தேவையான 5-இல் 1 பகுதி கரும்புகளை, அரசு கொள்முதல் செய்துள்ளது. வழக்கமாக, இக்கிராமத்தில் சாகுபடி
செய்யப்படும் கரும்புகளை தனியார் வியாபாரிகள் தோட்டத்திற்கே சென்று வெட்டி, ஏற்றிச் சென்றுவிடுவார்கள். தற்போது, அரசே கொள்முதல் செய்வதால், கரும்புகளை வெட்டி, டிராக்டர்கள் மூலம் கொண்டு சென்று லாரிகளில் ஏற்றும் வரையிலான பொறுப்பு விவசாயிகளை சேருகிறது….
ஒரு கரும்புக்கு 15 ரூபாய் வீதம், சுமார் 20 சதவீத கரும்புகளை அரசு முன்கூட்டியே கொள்முதல் செய்துவிடுவதால், மீதமுள்ள கரும்புகளை எளிதில் தனியாரிடம் விற்றுவிடலாம் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்….