தேர்தல் வாக்குறுதி கொடுக்காமலேயே அதிமுக ஆட்சியில் மூன்றரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது.. ஆனால்? – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை, ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழாவையொட்டி கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் ஏழை, எளிய மக்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிரியாணி வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கொசுக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இதனால் மாநகர் முழுவதும் வைரஸ் காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

மேலும், தேர்தல் வாக்குறுதி கொடுக்காமலேயே அதிமுக ஆட்சியில் மூன்றரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும், ஆனால் தேர்தல் வாக்குறுதியில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தரப்படும் என தெரிவித்த விடியா திமுக அரசு தற்போது வரை எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளது எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு மூன்றரை லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் என்ற விடியா அரசின் உத்தரவு, ஏழை எளிய மக்களை வஞ்சிக்கும் செயல் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். விடியா அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அதற்கான தொகையை தவணை முறையில் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றும் கூறினார். மாண்டூஸ் புயல் பாதித்து மூன்று மாதத்திற்கு மேல் ஆகியும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்காமல் விடியா அரசு அவர்களை ஏமாற்றிவிட்டதாக விமர்சித்தார்.

Exit mobile version