பஞ்சாபில் நெல் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருவதையொட்டி இந்திய உணவுக் கழகத்துக்காக மாநில அரசே விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல்லைக் கொள்முதல் செய்து வருகிறது. பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் விளைந்துள்ள நெல்லை அறுவடை செய்யும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மாநில அரசால் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை வெயிலில் காயவைத்து அதன் ஈரப்பதம் குறைந்தபின் சாக்குகளில் கட்டிக் கிடங்குகளுக்குக் கொண்டுசெல்கின்றனர். அரசே நேடியாகக் கொள்முதல் செய்வதால் நெல்லுக்கு உரிய விலை கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.