6ஆம் சுற்று பேச்சுவார்த்தையில் நம்பிக்கையில்லை – விவசாயிகள்

வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் 11வது நாளை எட்டியுள்ளது. இதேபோல், பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநில எல்லைகளிலும் குடும்பத்தினருடன் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர். சனிக்கிழமையன்று மத்திய அமைச்சர்கள் நடத்திய 5ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. அடுத்த சுற்று பேச்சுவார்த்தை வருகிற 9ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அந்த பேச்சுவார்த்தையில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. இதனிடையே, வருகிற 8ஆம் தேதி நடைபெறும் விவசாயிகளின் நாடு தழுவிய முழு அடைப்புக்கு காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

Exit mobile version