ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது கொல்கத்தா

ஐபிஎல் லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் கிரிஸ் லின்னும், சுனில் நரேனும் சொற்ப ரன்களுக்க அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த ராபின் உத்தப்பாவும், நிதிஷ் ராணாவும் எதிரணியினரின் பந்து வீச்சை நாலா புறமும் சிதற அடித்தனர். 34 பந்துகளில் 64 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராணா அவுட் ஆனார். இதையடுத்து களமிறங்கிய ஆண்ட்ரே ரசல் ஐந்து சிக்சர்களை பறக்க விட கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 218 ரன்கள் எடுத்தது.

219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்தது.அந்த அணியின் டேவிட் மில்லர் அதிகபட்சமாக 59 ரன்கள் எடுத்தார். இதனால் 28 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக அந்த அணியின் ஆண்ட்ரே ரசல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Exit mobile version