50,000 புகைப்படங்களை ஒன்றிணைத்து நிலவை துல்லியமாக படம்பிடித்து அசத்தியிருக்கிறார் 16 வயதேயான சிறுவன். இந்த புகைப்படம் தான் தற்போதைய சோஸியல் மீடியா வைரல்
ப்ரத்மேஷ் ஜாஜூ என்ற 16 வயதான சிறுவன் நிலவை அத்தனை அழகாக படம்பிடித்திருக்கிறார். இதுவரை யாரும் நிலவை இந்த அளவுக்கு ஆழமாக படம்பிடித்ததில்லை என்கிறார்கள் அறிவியலாளர்கள். 50ஆயிரம் புகைபடங்களை எடுத்து அவற்றை ஒன்றிணைத்து இந்த புகைபடத்தை உருவாக்கி சாதித்துள்ளார்.
நிலவின் 50,000 புகைப்படங்களை டெலஸ்கோப் வழியாக கிளிக் செய்துள்ள பிரத்மேஷ் ஜாஜு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த நிலவின் புகைப்படத்தை ஜூம் செய்தால் குவாலிடி உடைவதோ, மங்கலாக காட்சியளிப்பதோ அறவே இல்லை என்பது தான் இந்த புகைபடத்தின் புதுமை. 10ம் வகுப்பு படிக்கும் ப்ரத்மேஷூக்கு வானியல் துறையில் ஆர்வம் அதிகம். தனது தந்தையின் மூலம் தனக்கு இந்த ஆர்வம் ஏற்பட்டது என்று கூறுகிறார் ப்ரத்மேஷ்.
இந்த புகைப்படம் தொடர்பாக அவர் பேசுகையில், ““இந்த படம் இரண்டு வெவ்வேறு படங்களின் எச்டிஆர் கலவை. மேலும் இது 3டி எஃபெக்டை கொடுக்கும். மிகவும் துல்லியமான, ஆழமான நிலவின் புகைப்பட்டத்தை எதிரொலிக்கும் திறனுடைய புகைப்படம் இது. 50,000க்கும் அதிகமான புகைப்படங்களை 186 ஜிபியில் எடுத்தேன். இந்த புகைப்படத்தால் எனது லேப்டாப் முழுவதும் செயலிழந்துவிட்டது” என்கிறார் அவர்.
மே3ம் தேதி வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்ற அவர், டெலஸ்கோப் மூலமாக நிலவை புகைப்படம் எடுக்க ஆரம்பித்தார். நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கிய இந்த புகைப்பட்ட வைபவம் அதிகாலை 5 மணிக்குத்தான் முடிந்துள்ளது.
தொடக்கத்தில் நிலவின் பல்வேறு பகுதிகளை வீடியோக்களாக எடுத்துள்ளார். அதில் ஒவ்வொரு வீடியோவும் 2000 பிரேம்கள் இருந்துள்ளன. இவற்றை ஒரே படமாக ஒன்றிணைந்துள்ளார். மொத்தம் எடுத்த 38 வீடியோக்களை ஒன்றிணைத்ததில் அவருக்கு 50,000 போட்டோக்கள் கிடைத்துள்ளன.