விராலிமலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சம்பிரதாய முறையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சம்பிரதாய முறையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில், விராலிமலை சுற்றுவட்டார பகுதியில் மிகவும் பிரசித்திப் பெற்றது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தின் 2ஆம் செவ்வாய்க்கிழமை பூச்சொரிதல் விழாவும், அதனைத் தொடர்ந்து கோயில் அருகேயுள்ள விளியம்பூர் குளக்கரை திடலில், ஜல்லிக்கட்டுப் போட்டியும் நடத்தப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக, தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், சுமார் 15-க்கும் மேற்பட்ட காளைகள் மட்டும் அவிழ்த்து விடப்பட்டன.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. முன்னதாக கோயில் காளைகள் மேளதாளங்கள் முழங்க, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டன.

Exit mobile version