காவிரி உபரிநீரினை புதுக்கோட்டைக்கு கொண்டு வருதல் குறித்த அறிவிப்பிற்கு, அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் வேளாண் தேவைக்காக, மிக நீண்ட நாள் கோரிக்கையானதும், காவிரி உபரி நீர் திட்டமானதுமான, காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்பட உள்ள நிலையில், அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில், முதலமைச்சரை சந்தித்த அவர்கள், வர இருக்கின்ற ஆண்டு வரவு செலவு அறிக்கையில், அக்கினியாறு தெற்கு வெள்ளாறு வரையான இணைப்புத்திட்டத்தை நிறைவு செய்ய தேவையான நிதி ஒதுக்கீடு செய்து பணியினை தொடங்கி வைக்குமாறு கோரிக்கை வைத்தனர்.