புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பொறியியல் மற்றும் கலை அறிவியல் படிப்புகளுக்கு சேர நாளை காலை முதல் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் பொறியியல், மருத்துவம், கலை அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக சென்டாக் அமைப்பின் தலைவரும், கல்வித்துறை செயலருமான அன்பரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலனை கருத்தில் கொண்டு இந்தாண்டும் பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு ஒரே நேரத்தில் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்று கூறினார்.

Exit mobile version