புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சாதாரணமாக விற்கப்படுவதாக கூறி சட்டமன்ற உறுப்பினர்கள் பிளாஸ்டிக் பைகளுடன் சட்டசபைக்கு சென்றனர்
கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி புதுச்சேரியில் பிளாஸ்டிக் பைகள், கப்புகள், ஊதுகுழல் உள்ளிட்ட 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் விற்க மற்றும் தயாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அசாதாரணமாக விற்பனை செய்யப்படுவதாக கூறி சட்டமன்ற உறுப்பினர்கள், பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு சட்டமன்றத்திற்கு சென்றனர். தொடர்ந்து அரசை குற்றம்சாட்டிய அவர்கள் பிளாஸ்டிக் தடைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.