புதுச்சேரி மாநிலத்திலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி மாநிலத்திலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 59 ஆயிரத்து 566 ஆக உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாநில தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு வெளியிட்டார்.

ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 53 ஆயிரத்து 153 ஆகவும், பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 6 ஆயிரத்து 320 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 93 ஆகவும் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 59 ஆயிரத்து 566 ஆக இருப்பதாக தேர்தல் அதிகாரி கந்தவேலு தெரிவித்தார்.

Exit mobile version