புதுச்சேரியில் மதுபானங்களின் விலையை உயர்த்தி அம்மாநிலத்தின் கலால்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதால், மாநில வருவாயை பெருக்க அரசு பல்வேறு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளி நாட்டு மதுபானங்களின் விலை உயர்த்தப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்து இருந்தார். இதையடுத்து, புதுச்சேரி கலால்துறை மதுபானங்களின் விலையை உயர்த்தி அரசானை வெளியிட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் விற்கப்படும் உள்ளூர் மற்றும் வெளியூர் மதுவகைகளின் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது. பீர் ஒன்றுக்கு 10 ரூபாய் விலை உயர்ந்து உள்ளது. இதே போல் குறைந்த விலை குவர்ட்டர் பாட்டில் விலை 4 முதல் 7 ரூபாய் வரையிலும், நடுத்தர குவர்ட்டர் பாட்டில் விலை 7 முதல் 15 ரூபாய் வரையிலும், விலை உயர்ந்த குவர்ட்டர் பாட்டில் 15 முதல் 30 ரூபாய் வரையிலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.