புதுச்சேரி மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் 97.57 சதவிதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 3.2 சதவிதம் அதிகமாகும்.
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை நடைபெற்றது. 13 ஆயிரத்து 906 மாணவ மாணவியர் தேர்வெழுதினர். இதில் 13 ஆயிரத்து 629 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல் காரைக்கால் பகுதியில் நடந்த 10 ஆம் வகுப்பு தேர்வில் மொத்தம் 2 ஆயிரத்து 614 பேர் தேர்வெழுதினர். இதில் 2 ஆயிரத்து 490 பேர் தேர்ச்சி அடைந்தனர். புதுச்சேரியில் 98.1 சதவிகிதத்தினரும், காரைக்காலில் 95.26 சதவிகிதத்தினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வரும் 2 ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், அவரவர் படித்த பள்ளியில் வழங்கப்படுகிறது.