கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தைச் செயல்படுத்த புதுச்சேரி அரசு நடவடிக்கை: அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரியில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தைச் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாப்பது மற்றும் நிலத்தடிநீரை உயர்த்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நீர்நிலைகள் தூர்வாரவும், மழைநீர் சேகரிவுக்கவும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Exit mobile version