புதுச்சேரியில் சிதலமடைந்துள்ள மீன் அங்காடியை சீரமைத்து தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய முதலமைச்சர் நாராயணசாமி கோபமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லித்தோப்பு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான மீன் அங்காடி செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் மீன்களை விற்பனை செய்து வருகின்றனர். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த மீன் அங்காடியின் மேற்கூரை கடந்த மாதம் இடிந்து விழுந்த நிலையில் 2 பெண்கள் காயமடைந்தனர். இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனை உடனடியாக சீரமைத்துத் தரக்கோரி 100க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட முதமைச்சர் நாராயணசாமி, திடீரென ஆவேசம் அடைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.