புதுச்சேரியில் ரவுடியை மர்மநபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி வானரப்பேட்டையைச் சேர்ந்தவர் சாணிகுமார். இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. சிறையில் இருந்த இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் விடுதலையாகியுள்ளர். இந்நிலையில் நேற்று இரவு, இவர் வானரப்பேட்டையில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழாவிற்கு வந்துள்ளார். அப்போது முகமூடி அணிந்து வந்த 6 பேர் கொண்ட மர்மக்கும்பல் ரவுடி சாணிகுமார் மீது நாட்டு வெடிகுண்டை வீசினர். இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இதனையடுத்து அந்தக் கும்பல் சாணிகுமாரின் வீட்டிற்கே சென்று அவர் வெளியே வந்த நேரத்தில் சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சாணிகுமார் உடலைக் கைப்பற்றிப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.