பட்டாம்பூச்சிக்கு மாநில சின்னம் அந்தஸ்து வழங்கி அரசாணை வெளியீடு

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சின்னங்களில் ஒன்றாக தமிழ் மறவன் பட்டாம்பூச்சி வனத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழக அரசின் மாநில சின்னங்களாக ,ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம், பனைமரம், வரையாடு, கபடி, பரதநாட்டியம், பலாப்பழம், செங்காந்தள் மலர், மரகதப்புறா உள்ளிட்டவை இருக்கும் நிலையில், தற்போது மாநில பட்டாம்பூச்சியாக தமிழ் மறவன் பட்டாம்பூச்சி தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது..

முதன்மை வனக்காப்பாளர் மற்றும் தலைமை வன உயிர்கள் பாதுகாவலர், தமிழக வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல்துறைக்கு அளித்த பரிந்துரையை ஏற்று தமிழக அரசு இந்த அரசாணையை வெளியிட்டுள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலைகளில் வாழும் 32 வகை பட்டாம்பூச்சிகளில் இந்த பட்டாம்பூச்சிகள் கூடி வாழும் பழக்கமுடையவை.

இதன்மூலம் இந்திய அளவில் பட்டாம்பூச்சிக்கு மாநில அந்தஸ்து தரும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 5 வது இடம் பிடிக்கிறது.

Exit mobile version