ஆசிரியர் தகுதித்தேர்வின் 2 ஆம் தாள் தேர்விலும், 1 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற, ஆசிரியர் தகுதித் தேர்வு 2010-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் 8, 9-ஆம் தேதிகளில் முதல் தாள், இரண்டாம் தாள் என்று ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது.
முதல் தாள் தேர்வை தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 341 பேரும், இரண்டாம் தாள் தேர்வை 3 லட்சத்து 79ஆயிரத்து 733 பேரும் எழுதி இருந்தனர். இதனிடையே, முதல்தாள் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் trb.tn.nic.in என்ற இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
அதில் 1 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்நிலையில், இன்று இரண்டாம் தாள் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்விலும் 1 சதவீதம் மட்டுமே, அதாவது 324 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.