பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ரேண்டம் எண் வெளியிட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்திய ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளத்தில் தரவரிசை பட்டியலை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கணித பாடத்திற்கு 100 மதிப்பெண்கள், இயற்பியல், வேதியியல் பாடங்களுக்கு தலா 50 மதிப்பெண்கள் என 200 மதிப்பெண்களுக்கு தரிவரிசை மதிப்பு கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, அரசுப் பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நாளை முதல் வரும் 24ஆம் தேதி வரையும், பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது.