முதுகலை பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

முதுகலை பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கல்லைகழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தரவரிசை பட்டியலை மாணவர்கள் அவர்களுடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியல் www.annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் இடம் பிடித்தவர்களுக்கு இந்த மாதம் 27ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரடி முறையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. 27ஆம் தேதி GATE பிரிவின் கீழ் விண்ணப்பத்தவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை TANCET பிரிவின் கீழ் உள்ள விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

Exit mobile version