வேளாண் மண்டல சட்டத்தில் தடை விதிக்கப்பட்ட தொழில்கள் குறித்து அரசிதழில் வெளியீடு

வேளாண் மண்டல சட்டத்தில் குறிப்பிட்ட தொழில்கள் தொடங்க விதிக்கப்பட்ட தடை தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் இந்த விவரங்கள் அரசிதழில் வெளியாகி உள்ளன.

அதன்படி, துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது செயல்முறை ஆலை, ஒருங்கிணைந்த எஃகு ஆலை அல்லது இளகு இரும்பு ஆலை, செம்பு மற்றும் அலுமினியம் உருக்காலைகள், விலங்குகளின் எலும்பு, கொம்பு, குளம்புகள் மற்றும் பிற உடல் பாகங்களைப் பதப்படுத்துதல், தோல் பதனிடுதல், எண்ணெய் மற்றும் நிலக்கரி படுகை மீத்தேன், மென்களிக்கல் எரிவாயு, பிற ஹைட்ரோகார்பன்கள் உள்ளடங்கிய இயற்கை வாயுக்களின் ஆய்வு, துளைத்தல், பிரித்தெடுத்தல், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்படுகிறது. 

Exit mobile version