நகராட்சித் தலைவர் பதவி இட ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியீடு

நகராட்சித் தலைவர் பதவிகளில் பெண்கள், ஆதிதிராவிடர்களுக்கான இட ஒதுக்கீட்டுப் பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதன்படி, நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி, பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, சீர்காழி, திருத்துறைப்பூண்டி, வால்பாறை, உதகமண்டலம், சங்கரன்கோவில், பேரணாம்பட்டு, குன்னூர், பெரம்பலூர் உள்ளிட்ட நகராட்சிகள் ஆதி திராவிட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போன்று, நெல்லிக்குப்பம், அரக்கோணம், நெல்லியாளம், ஆத்தூர், திருவேற்காடு, நரசிங்கபுரம், கூத்தநல்லூர், மறைமலைநகர் உள்ளிட்ட நகராட்சிகளில் ஆதி திராவிட வகுப்பை சேர்ந்த ஆணோ, பெண்ணோ போட்டியிடலாம்.  விழுப்புரம், ஆம்பூர், குடியாத்தம், வந்தவாசி, வேதாரண்யம், காரைக்குடி, தென்காசி, விருதுநகர், திருவாரூர், கடலூர், வாணியம்பாடி, செங்கல்பட்டு, தருமபுரி, பொள்ளாச்சி உள்ளிட்ட 51 நகராட்சிகள், அனைத்துச் சாதிப் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version