குடிமராமத்து திட்டத்தை மேம்படுத்த பொதுப்பணித் துறை உத்தரவு

குடிமராமத்து திட்டத்தில் அடுத்த 5 ஆயிரம் ஏரிகளை புனரமைப்பதற்கான திட்ட மதிப்பை தயாரிக்க அனைத்து மாவட்ட தலைமை பொறியாளர்களுக்கும் பொதுப்பணித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்திட முடிவு செய்து தமிழக முதலமைச்சரால் கடந்த 2017ம் ஆண்டு குடிமராமத்து திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள தூர் வாரப்படாத நீர் நிலைகளை கண்டறிந்து தூர் வாருவதோடு, நீர்நிலைகளை பலப்படுத்தும் பணிகளிலும் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தண்டு 500 கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 829 ஏரிகள் தூர் வாரி புனரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்த நிலையில் வரும் ஆண்டு 5000 ஏரிகளை தூர் வார தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பொதுப்பணித்துறை நீர்வள தலைமை பொறியாளர் ராமமூர்த்தி அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளார். அதில் 5 ஆண்டுகளாக தூர் வாரப்படாத ஏரிகளை கண்டறிந்து திட்ட அறிக்கை தயாரிக்க அறிவுரை வழங்கியுள்ளார். திட்ட அறிக்கை கிடைத்ததும் முன்னுரிமை அடிப்படையில் ஏரிகள் தூர்வாரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version