பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி

காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தியதில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் நடத்தப்பட்ட அஞ்சலியின்போது, பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

காஷ்மீர் தாக்குதலில் வீர மரணமடைந்த தூத்துக்குடி கயத்தாரைச் சேர்ந்த சுப்பிரமணியன் உட்பட 44 வீரர்களுக்கும், காவல் துறை துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையில், மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் ஏராளமான இந்து முன்னணி அமைப்பினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

Exit mobile version