கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக வரும் 31ம் தேதி வரை அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஏற்கெனவே 15ம் தேதி வரை அரசு பொது போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளது. போர்க்கால அடிப்படையில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதையும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வரும் 31ம் தேதி முடிய தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.