மதுரையில் சுத்திகரிக்கப்பட்ட நீர் கொடுத்த தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி

மதுரையில், 10 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம் அமைத்து தந்த தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

தமிழக அரசின் சீரிய முயற்சியால், தமிழகமெங்கும் இருக்கக்கூடிய மக்களுக்கு, உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கக்கூடிய குடிநீரை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சீரிய முயற்சியால், சிறப்பாக அனைத்துப் பகுதிகளிலும் வழங்கி வருகிறது. அதன்படி மதுரை அழகர்கோவில் சாலை அருகே உள்ள பாரத் நகரில், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து, 10 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையத்தை, சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பொது மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து தற்போது வரை 20 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தங்கள் பகுதியில் குடிநீர் பஞ்சம் இல்லை என்றும், சுத்திகரிக்கப்பட்ட நீர் கிடைக்க ஏற்பாடு செய்த தமிழக அரசிற்கும், தமிழக முதலமைச்சருக்கும் பொதுமக்கள் தங்களது நன்றியை தெரிவித்தனர்.

Exit mobile version