அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தந்த தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி

உடுமலை அருகே குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொடுத்த தமிழக அரசிற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உள்ளன. இவை அனைத்துக்கும் திருமூர்த்திமலை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் நீர் வழங்கப்பட்டு வருகிறது. இருந்தும் நீர் வழங்களில் சிக்கல்கள் இருந்து வந்தநிலையில், அதை சரிசெய்யும் விதமாக, 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தரைமட்ட தொட்டி மற்றும் 2 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நடைபெறும் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு பணிகளையும், ஆய்வு செய்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி ஆய்வு செய்தார். இதையடுத்து, கோரிக்கையை ஏற்று அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொடுத்த தமிழக அரசுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version