தூத்துக்குடி சிவகுளத்தைத் தூர்வாரும் தமிழக அரசுக்குப் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
வடகிழக்குப் பருவமழைக் காலம் வரவிருப்பதை முன்னிட்டுத் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், மீளவிட்டான் அருகேயுள்ள 130 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிவகுளத்தை ஆழப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. உலக வங்கி நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட இந்தப் பணியானது தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இக்குளத்தைச் சுற்றி நடைபாதை அமைத்து பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், பறவைகள் தங்கும் சரணாலயம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மீண்டும் பசுமை வாய்ந்த பகுதியாக மாறும் என்பதாலும், நீரைச் சேமித்து வைக்க உதவும் என்பதாலும் இந்தத் திட்டத்திற்குப் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுப் பணிகளை விரைந்து செயல்படுத்தும் தமிழக அரசுக்குப் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.