கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் எனக்கூறும் அப்பகுதி மக்கள், மருத்துவமனையை அமைத்து கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரள மாநிலம் செல்லவேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில், நாகர்கோவிலில் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த கட்டிடத்தில் அரசு ஆயுர்வேத மருத்துவமனையை தமிழக அரசு அமைத்தது.
செயல்பட தொடங்கிய சில காலங்களில் இந்திய அளவில் சிறந்த ஆயுர்வேத மருத்துவமனை என்ற பெயரை பெற்றது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் இங்கு வருகை தந்து தங்கள் நோய்களை நிரந்தரமாக நீக்கி மகிழ்ச்சியுடன் திரும்பி செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.