பொதுமக்களின் வரிப்பணம் வறுமையில் உள்ளவர்களுக்கு மட்டுமே பயன்பட வேண்டும் – கிரண்பேடி

பொதுமக்களின் வரிப்பணம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அரசு துறை அலுவலகங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று புதுச்சேரி அரசு பதிவாளர் அலுவலகத்தை அதிரடியாக ஆய்வு மேற்கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் இலவச பொருட்கள் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இது புதுச்சேரி மாநிலத்திற்கும் பொருந்தும் என தெரிவித்தார். 

Exit mobile version