நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு , திமுக அமைச்சர் பலமணி நேரம் வராததால் பொதுமக்கள் அவதி

தீவனூர் பகுதியில் வருவாய் துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் காலை 10 மணிக்கு திமுக அமைச்சர் கே.எஸ் மஸ்தான் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பயனாளிகள் மற்றும் அதிகாரிகள் காலை 9 மணி முதலே காத்துகிடந்தனர். ஆனால் மதியம் ஒரு மணி ஆகியும் திமுக அமைச்சர் வராததால் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்தனர். மேலும் கர்ப்பிணிப் பெண்கள் குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி இல்லாமல் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். விடியா ஆட்சியின் அவலங்களால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

YouTube video player

Exit mobile version