உதயநிதி ஸ்டாலினை வரவேற்க வைக்கப்பட்ட பேனர்கள், கொடிகளால் பொதுமக்கள் அவதி

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க சாலையில் திமுகவினர் வைத்த பேனர்களால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இடையூறை அடுத்து பேனர்களை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

திருச்சியில் திமுக சார்பில் பொதுக்குழு விளக்க கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்காக விமான நிலையம் எதிரில் உள்ள ஒயர்லெஸ் சாலையில் பொதுக்கூட்டத்திற்கு மேடை அமைக்கப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ள உதயநிதியை வரவேற்க அக்கட்சியினர் நெடுஞ்சாலைகளில் பிரமாண்ட பேனர்கள் வைத்ததால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பேனர்களை அகற்ற உத்தரவிட்டார்.

Exit mobile version