கடந்த 6 மாத காலங்களில் 95 ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவுக்கு பொதுத்துறை வங்கிகளில் மோசடி நிகழ்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் இதுகுறித்த கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், ரிசர்வ் வங்கி தகவலின்படி, கடந்த ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30ம் தேதி வரையிலான 6 மாத காலத்தில், 5 ஆயிரத்து 743 வங்கி மோசடிகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பொதுத்துறை வங்கிகளில் 95 ஆயிரத்து 760 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கி மோசடிகளை தடுக்க விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இதன் ஒருபகுதியாக, செயல்பாட்டில் இல்லாத 3 லட்சத்து 38 ஆயிரம் நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.