பொதுத்துறை வங்கிகள் இணைப்பை எதிர்த்து நாளை வேலைநிறுத்தம்

பொதுத் துறை வங்கிகள் இணைப்பை கைவிடக் கோரி வங்கி ஊழியாகள் நாளை அடையாள வேலைநிறுத்ததில் ஈடுபட உள்ளனர்.

வருகின்ற 2020ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பொதுத் துறை வங்கிகளை இணைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த அறிப்பை எதிர்த்தும், வங்கிகளை இணைக்கும் முடிவை கைவிடக்கோரியும் நாடு முழுவதும் நாள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்ததில் ஈடுபட போவதாக தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்திய அளவில் நடைபெறும் வேலை நிறுத்த இந்த போராட்டத்தில் 5 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாக தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளார் அருணாசலம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version