பொதுத்துறை வங்கிகளிடம் போதுமான நிதி கையிருப்பில் உள்ளது-மத்திய நிதியமைச்சர்

பொதுத்துறை வங்கிகளிடம் போதுமான நிதி கையிருப்பில் உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகளிடம் போதிய நிதி உள்ளதாகவும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குப் பெரு நிறுவனங்கள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையைத் தீபாவளிக்கு முன் வழங்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் 9 நாட்கள் நாடு முழுவதும் வங்கிகள் நடத்திய கடன் வழங்கும் முகாம்கள் மூலம் 81 ஆயிரத்து 781 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய நிதித்துறைச் செயலாளர் ராஜீவ் குமார் தெரிவித்தார். இதில் புதிதாக வழங்கப்பட்ட கடன் மட்டும் 34 ஆயிரத்து 342 கோடி ரூபாயாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version