இலங்கையில் தற்போது பொதுமக்கள் பயத்துடன் வாழ்ந்து வருவதாக அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்தா ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
கொழும்புவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், விடுதலைப் புலிகளின் காலத்தில் கூட மாற்று மதத்தினர் மத சுதந்திரத்துடன் அச்சமின்றி வாழ்ந்ததாகவும் ஆனால் தற்போது அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றும் அதிகாரம் தற்போதைய அரசிற்கு கிடையாது என்றும் குறிப்பிட்டார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் மகிந்தா ராஜபட்சே தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் விரைவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.