தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்படும் நிலையில், கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அரசு அனுமதி தர மறுப்பது ஏன்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி தமிழக அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறந்துள்ளது. இதனையடுத்து நாள்தோறும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை திறப்பதில் முனைப்பு காட்டிய திமுக அரசு, கோயில்களை திறக்க பக்தர்களின் கோரிக்கையை பரிசீலிக்க மறுப்பது ஏன் என்ற கேள்வியையும் பொதுமக்கள் முன்வைக்கின்றனர். மேலும் டாஸ்மாக் கடைகளால் பரவாத கொரோனா, கோயில்களில் பரவுமா என்ற கேள்வியையும் பக்தர்கள் முன்வைக்கின்றனர். தினமும் குறைந்தபட்சம் உள்ளூர் மக்கள் 500 பேருக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்து தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.