பாதுகாப்பு இடைவெளியின்றி மீன் கடைகளில் கூடிய பொதுமக்கள்

ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டாலும், சென்னையில் மீன் வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

கொரோனா பரவலைத் தடுக்க, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மீன் மார்கெட் பகுதிகளில், மொத்த வியாபாரத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு, சில்லறை வியாபாரங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு, சென்னை பட்டினப்பாக்கம் மீன் மார்க்கெட்டில், காலை முதலே மீன் வாங்குதற்காக ஏராளமான மக்கள் குடும்பத்தோடு வந்தனர்.

இதனால், கூட்டம் அதிகரித்து, பெரும்பாலான கடைகளில் பாதுகாப்பு இடைவெளி கடைபிடிக்க முடியாத சூழல் காணப்பட்டது.

இதே போல, திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில், பொதுமக்கள் கூட்டம் அலை மோதியதால், கொரானா தொற்று பரவும் சூழல் ஏற்பட்டது.

ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு, திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில் இறைச்சிக் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

காவல்துறையினர் முறையாக கண்காணிக்காததால், பாதுகாப்பு இடைவெளியின்றி பொதுமக்கள் கூட்டம் கூடினர்.

கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்கப்படாததால், அப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.

 

Exit mobile version